A- A A+     |    1800 - 425 - 31111 French    |     Tamil    |     Who’s is who
A- A A+ 1800 - 425 - 31111 French Tamil Who’s is who
enchantment

உலக சுற்றுலா பட்டியலில் மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில்

சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிட்டு வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் 2016ம் ஆண்டில் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெற்றுள்ளது. நியூயார்க் டைம்ஸ் வெயிட்டுள்ள சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் பட்டியலில் 52 இடங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழகம் 24வது இடத்தில் உள்ளது. தமிழகத்தை பற்றி குறிப்பிட்டுள்ள நியூயார்க் டைம்ஸ், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முதல் செட்டிநாடு உணவு வரை குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தின் பெருமைகளை பற்றியும் மிக உயர்வாக எடுத்துரைத்துள்ளது.மீனாட்சி அம்மன் கோயில்: தமிழகத்தை பற்றி நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ள குறிப்பில், வட இந்தியாவில் முகலாயர் காலத்து அரண்மனைகளும், கோட்டைகளுமே இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களாக உள்ளன. ஆனால் தென்னிந்தியாவில் தமிழகம், வடஇந்தியாவிற்கு இணையான பிரம்மாண்டத்தையும் கண்டறியப்படாத வரலாறுகளும் உள்ளன. இந்தியாவில் மிக அதிகமான கோயில்களும், கலாச்சார பெருமைகளும் தமிழகத்தில் நிறைந்துள்ளது. பல ஊர்கள் பெரியதாக இருந்தாலும் அவைகள் குறுநகரங்களாகவே கருதப்படுகின்றன. மதுரையில் மீனாட்சி அம்மனுக்காக அமைக்கப்பட்டுள்ள மீனாட்சி கோயில் மிக பரந்து விரிந்துள்ளது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், இந்தியாவின் மிகச் சிறந்த, பழமையான வம்சாவளியான சோழர்களால் கட்டப்பட்டது.வாழை இலை விருந்து:பல நூறு கோயில்கள் தமிழக கிராமங்களில் அமைந்துள்ளன. இவற்றில் வரையப்பட்டுள்ள குகை ஓவியங்கள் 9ம் நூற்றாண்டை சேர்ந்தவை. கோயில்கள் மட்டும் கலாச்சாரத்தை போற்றுபவைகள் அல்ல. செட்டிநாடு பகுதியில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பர்மா தேக்கினால் செதுக்கப்பட்ட வீடுகள் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. மசாலா சுவை மற்றும் நறுமணத்துடன் தமிழகத்தில் சமைக்கப்படும் உணவுகள் மற்றும் வாழை இலையில் பரிமாறப்படும் முறையும் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவை. தமிழகத்தின் மிக குறைந்த அளவிலான உள்கட்டமைப்பு சுற்றுலா பயணிகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனால் சமீப காலமாக பல பெரு நகரங்களுக்கு இணையாக தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் திறக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் இந்த பாராட்டுக்கு சுற்றுலா துறையினர் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நியூயார்க் டைம்ஸ்2014 ம் ஆண்டு வெளியிட்ட சிறந்த சுற்றுலா நகரங்களின் பட்டியலில் சென்னை மட்டுமே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

An Official Website Of Tamilnadu Tourism Development Corporation and Department Of Tourism
  Contact:ttdc@vsnl.com Tech Support: Soft Source Technologies Private Limited